தமிழ் மண்டையைப் பிள யின் அர்த்தம்

மண்டையைப் பிள

வினைச்சொல்பிளக்க, பிளந்து

  • 1

    (தலைவலி, வெயில் போன்றவை) பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குக் கடுமையாக வருத்துதல்.

    ‘காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளக்கிறது’
    ‘வெளியே போக முடியவில்லை. வெயில் மண்டையைப் பிளக்கிறது’
    ‘மண்டையைப் பிளக்கிற வெயிலில் குழந்தையையும் தூக்கிக்கொண்டு எங்கே கிளம்பிவிட்டாய்?’