தமிழ் மண்ணோடு மண்ணாகு யின் அர்த்தம்

மண்ணோடு மண்ணாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (இருந்த சுவடே தெரியாதவாறு அடியோடு) அழிந்துபோதல்.

    ‘ஐம்பது வருடத்துக்கு முன்னால் ஊரில் அந்தக் குடும்பம் பண்ணிய அக்கிரமத்துக்கு அளவே இல்லை. இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டது’
    ‘இந்தக் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் மண்ணோடு மண்ணாகிப்போனாலும், அவர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அவை கம்பீரமாக இன்றும் இருக்கின்றன’