தமிழ் மண்ணைப் போடு யின் அர்த்தம்

மண்ணைப் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவருடைய வேலை, பிழைப்பு போன்றவற்றைக் குறித்து வரும்போது) இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படும்படி செய்தல்.

  ‘ஏதோ நடைபாதையில் கடைவைத்துப் பிழைத்துக்கொண்டிருந்தேன். அதிலும் நகராட்சி மண்ணைப் போட்டுவிட்டது’
  ‘‘வேலையை விட்டுப் போகச்சொல்லி, என் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்’ என்று கதறினான்’

 • 2

  பேச்சு வழக்கு (ஒருவரின் ஆசை, எண்ணம் போன்றவற்றை) நிறைவேறவிடாமல் செய்தல்.

  ‘உன்னைப் பற்றி எப்படியெல்லாம் கனவுகண்டேன். இப்படி என் ஆசையில் மண்ணைப் போடுவாய் என்று நினைக்கவே இல்லை’
  ‘ஞாயிற்றுக்கிழமையாவது ஓய்வாக இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த நினைப்பிலும் நண்பர் மண்ணைப் போட்டுவிட்டார்’