பெயர்ச்சொல்
- 1
ஒரு பொருளுக்கு உரியதாகவும் மனத்துக்கு உகந்ததாகவும் இருக்கும் வாசனை; நறுமணம்.
‘தாழம்பூ மணம்’‘வெங்காய சாம்பார் மணம்’உரு வழக்கு ‘தெய்வீக மணம் கமழும் பாசுரங்கள்’ - 2
இலங்கைத் தமிழ் வழக்கு துர்நாற்றம்.
‘வீடு பூட்டியே இருப்பதால் ஒரே மணமாகக் கிடக்கிறது’‘ஊதுவத்தி ஏற்றிவைத்தால் இந்த மணமெல்லாம் போய்விடும்’‘ஒழுங்கையில் ஒரே மணமாகக் கிடந்ததால் மூக்கைச் சுருக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டேன்’
பெயர்ச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு
காண்க: திருமணம்