தமிழ் மணல் யின் அர்த்தம்

மணல்

பெயர்ச்சொல்

  • 1

    (கடற்கரை, பாலைவனம், ஆறு போன்ற இடங்களில்) காணப்படுவதும் நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மையற்றதும் பொடியாக இருப்பதுமான துகள்கள்.

    ‘மணற்பாங்கான பகுதியில் பயிர் விளைவிக்க முடியாது’
    ‘பூச்சுக் கலவைக்கு இன்னும் கொஞ்சம் மணல் சேர்த்துக்கொள்ளலாம்’
    ‘பொடி மணல்’