மணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மணி1மணி2

மணி1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பெரும்பாலும்) வெண்கலத்தால் செய்த, கவிழ்த்த கிண்ணம் போன்ற பகுதியின் நடுவில் தொங்கும் நாக்கால் அடிக்கப்பட்டு ஒலி எழுப்பும் சாதனம்.

  ‘கோயில் மணியோசை தெளிவாகக் கேட்டது’

 • 2

  (ஒருவரின் வருகையைத் தெரிவிக்கும் விதத்தில்) விசையை அழுத்தினால் வீட்டினுள் ஒலி எழுப்பும் சாதனம்.

  ‘கதவைத் திறக்க யாரும் வராததால் மீண்டும் ஒரு முறை மணியை அழுத்தினார்’
  ‘குழந்தை விடாமல் மணியை அடித்துக்கொண்டிருந்தது’

 • 3

  (குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காரியம் நடக்கும் என்பதைக் காட்ட) கையால் அடித்து அல்லது மின்சக்தியைக் கொண்டு இயக்கப்படும் சாதனம்.

  ‘பள்ளி மணி அடித்ததும் குழந்தைகள் வேகமாக வெளியே ஓடி வந்தனர்’
  ‘பார்வையாளர்களுக்கான நேரம் முடிவடைந்ததைக் காட்டும் விதத்தில் மருத்துவமனையில் மணி அடித்தது’

 • 4

  அறுபது நிமிடம் கொண்ட கால அளவு.

  ‘அரை மணியில் இந்த வேலை முடிந்துவிடும்’

 • 5

  மேற்குறிப்பிட்ட கால அளவின் அடிப்படையில் ஒரு நாளைக் கணக்கிட்டுப் பிரித்திருக்கும் பிரிவு; நேரம்.

  ‘மணி என்ன ஆகிறது?’

 • 6

  இலங்கைத் தமிழ் வழக்கு சில ஆடுகளின் கழுத்தில் தொங்கும் சிறிய தசைப் பகுதி.

மணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மணி1மணி2

மணி2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஆபரணம் முதலியவற்றில் பதிக்கும்) விலை உயர்ந்த கற்களைக் குறிக்கும் பொதுப்பெயர்; (குறிப்பாக) நீலம்.

  ‘மணிகள் பதித்த கிரீடம்’
  ‘இறைவனை ஒப்பிலா மணி என்றார்’
  ‘மணி போன்ற கண்கள்’

 • 2

  (மாலையாகக் கோக்கப் பயன்படும்) துளை கொண்ட சிறிய உருண்டை வடிவப் பொருள்.

  ‘மணி மாலை உன் கழுத்துக்கு அழகாக இருக்கிறது’
  ‘கடைக்குப் போனால் கறுப்பு மணி கொஞ்சம் வாங்கிக்கொண்டு வா’

 • 3

  (நெற்பயிர் முதலியவற்றின்) கதிரில் உள்ள தானியம்.

  ‘வழியில் சிதறிக்கிடந்த நெல் மணிகளைக் கோழிகள் கொத்தித் தின்றுகொண்டிருந்தன’

 • 4

  ஒன்றின் வடிவத்தைக் குறிப்பிடும்போது) (உருண்டை) வடிவில் அழகானது.

  ‘என் மகளின் கையெழுத்து மணிமணியாக இருக்கும்’
  ‘மணிமணியான கையெழுத்து!’

 • 5

  நேர்த்தி; சிறப்பு.

  ‘மணிப் பயல்’
  ‘மணியான குழந்தைகள்’
  ‘பேச்சு மணியாக இருந்தது’