மணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மணை1மணை2

மணை1

பெயர்ச்சொல்

 • 1

  அடியில் சிறு குமிழோ கட்டையோ பொருத்தப்பட்டு உட்கார்வதற்குப் பயன்படுத்தும் பலகை.

  ‘மணையை எடுத்துப்போட்டு உட்கார்!’

 • 2

  (வீடுகளில் பயன்படுத்தும்) சில வெட்டும் கருவிகளின் அடிக்கட்டை.

  ‘தேங்காய்த் துருவிக்குப் புது மணை மாற்ற வேண்டும்’

மணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மணை1மணை2

மணை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கத்தியின்) கூர்மை.

  ‘கத்தி மணை மழுங்கிவிட்டது; பட்டறையில் தோய்வித்துக்கொண்டு வா’