தமிழ் மத்திய யின் அர்த்தம்

மத்திய

பெயரடை

 • 1

  மத்திய அரசைச் சார்ந்த/மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட.

  ‘மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலையம்’
  ‘மத்திய அமைச்சர்கள்’

 • 2

  நடுவில் அமைந்த.

  ‘ஊரின் மத்தியப் பகுதியில் குளம் இருந்தது’

 • 3

  பல பிரிவுகளாக அமைந்திருப்பவற்றில் முக்கியமானதாகவோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டதாகவோ அமையும்.

  ‘காங்கிரஸ் மத்தியக் குழு நாளை கூடுகிறது’
  ‘மத்தியச் சிறை’
  ‘மத்திய நூலகம்’