தமிழ் மதர்ப்பு யின் அர்த்தம்

மதர்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (உடலைக் குறிப்பிடும்போது) செழிப்பு; வளம்.

  ‘அவளுடைய மதர்ப்பான தோற்றத்தைக் கண்டு மயங்காதவர்களே இல்லை’

 • 2

  திமிர்.

  ‘அவனுடைய பேச்சில் இருந்த மதர்ப்பு எனக்கு எரிச்சலூட்டியது’
  ‘திருவிழாக் கடையை ஏலம் எடுத்த மதர்ப்பில் பேசுகிறான்’