மதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதி1மதி2மதி3

மீதி1

பெயர்ச்சொல்

 • 1

  மிச்சம்; மீதம்.

  ‘மீதி வைக்காமல் சாப்பிடு!’
  ‘செலவு போக மீதி இவ்வளவுதானா?’

 • 2

  (ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்த பின்) எஞ்சியிருப்பது; பாக்கி.

  ‘ஐந்தில் இரண்டு போனால் மீதி மூன்று’

மதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதி1மதி2மதி3

மதி2

வினைச்சொல்மதிக்க, மதித்து

 • 1

  (ஒருவரின் வயது அல்லது ஒன்றின் விலை, அளவு முதலியவற்றை) கணக்கிடுதல்; அளவிடுதல்; நிர்ணயித்தல்.

  ‘விலை மதிக்க முடியாத கலைச் செல்வங்கள்’
  ‘விபத்தில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் இறந்துபோனார்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரை) உயர்வாகக் கருதுதல்; உரிய மதிப்புக் கொடுத்தல்.

  ‘உயிருக்கும் மேலாக மதிக்கக் கூடியவை எவை?’
  ‘மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்’
  ‘அந்த எழுத்தாளரை நான் மிகவும் மதிக்கிறேன்’

மதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதி1மதி2மதி3

மதி3

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அறிவு; புத்தி.

  ‘விதியை மதியால் வெல்ல முடியும்’

மதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதி1மதி2மதி3

மதி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நிலவு.

  ‘மதி போன்ற முகம்’