தமிழ் மதிப்பிடு யின் அர்த்தம்

மதிப்பிடு

வினைச்சொல்மதிப்பிட, மதிப்பிட்டு

 • 1

  (அளவு, விலை முதலியவற்றின் மூலம் அல்லது தரத்தின் அடிப்படையில்) கணக்கிடுதல்; நிர்ணயித்தல்; மதிப்பைக் கண்டறிதல்.

  ‘வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் நூறு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது’
  ‘விலை மதிப்பிட முடியாத பழமையான பொருள்கள்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்ட) கண்ணோட்டம் அல்லது கருத்து வைத்திருத்தல்.

  ‘காந்தியடிகளை அரசியல்வாதி, தத்துவஞானி என்று பலவாறாக மதிப்பிடலாம்’
  ‘அவனைக் குறைத்து மதிப்பிடாதே’
  ‘ஒரு இலக்கியப் படைப்பை மதிப்பிடுவதற்குக் கோட்பாடுகள் எந்த விதத்திலும் உதவுவதில்லை’