தமிழ் மதிப்பு யின் அர்த்தம்

மதிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பொருளுக்கு விலையாக) நிர்ணயிக்கப்பட்ட அளவு; பெறுமானம்.

  ‘இந்த வீட்டின் மதிப்பு இருபது லட்சம் இருக்கும்’

 • 2

  உயர்வாகக் கருதப்படும் நிலை; மரியாதை.

  ‘அவர் மேல் நான் பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்’
  ‘எல்லோரும் அவருக்கு மதிப்புத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’
  ‘நீ இப்படிக் குடித்தால் உன் மதிப்பு மரியாதை எல்லாம் போய்விடும்’

 • 3

  மதிப்பீடு.

  ‘என் மதிப்பில் இது நல்ல படம்தான்’