தமிழ் மதில் யின் அர்த்தம்

மதில்

பெயர்ச்சொல்

  • 1

    (அரண்மனையை உள்ளடக்கிய) கோட்டையின் வெளிச்சுவர்/(கட்டடத்தின்) சுற்றுச்சுவர்.

    ‘மதில் சுவரை ஒட்டிக் கீழே அகழி இருந்தது’
    ‘கோட்டையின் மதில்மீது ஆங்காங்கே காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன’
    ‘திருடர்கள் உள்ளே வந்துவிடாமல் இருக்க, மதில் சுவரின் மேல்பகுதியில் கூர்மையான கண்ணாடித் துண்டுகளைப் பதித்திருந்தார்கள்’