தமிழ் மந்திரி யின் அர்த்தம்

மந்திரி

வினைச்சொல்மந்திரிக்க, மந்திரித்து

 • 1

  (மந்திரவாதி போன்றோர் விஷத்தை இறக்கவோ நோய் முதலியவற்றை நீக்கவோ) மந்திரம் சொல்லுதல்.

  ‘தேள் கடிக்கு சாமியாரிடம் போய் மந்திரித்துக் கொண்டு வந்தாள்’
  ‘பூசாரி மந்திரித்துத் தந்த தாயத்து’

தமிழ் மந்திரி யின் அர்த்தம்

மந்திரி

பெயர்ச்சொல்

 • 1

  (அரசனின்) அமைச்சன்.

 • 2

  அருகிவரும் வழக்கு அமைச்சர்.