தமிழ் மந்திரம் யின் அர்த்தம்

மந்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  (வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும்) சக்தி வாய்ந்ததாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிற சொற்கள் அல்லது ஒலிகள்.

  ‘குருக்கள் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்தார்’
  ‘வேத மந்திரம் கூறி வாழ்த்தினார்’

 • 2

  நம்ப முடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டிய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்.

  ‘திரைப்படத்தில் மந்திரவாதி ‘ஜீபூம்பா’ என்று மந்திரத்தைச் சொன்னதும் இளவரசி அழகிய கிளியாக மாறினாள்’