தமிழ் மனத்தில் போட்டுக்கொள் யின் அர்த்தம்

மனத்தில் போட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (ஒருவர் தன்னிடம் கூறும் செய்தி, தகவல், விவரம் போன்றவற்றைப் பிறருக்குத் தெரிவிக்காமல்) தன்னளவில் மட்டும் வைத்துக்கொண்டிருத்தல்.

  ‘அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பாய். நான் சொன்னதையும் மனத்தில் போட்டுக்கொள்’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறையில்) (முன்பு நடந்த நிகழ்ச்சியை) நினைத்து வருந்துதல்.

  ‘உன் அப்பாதானே திட்டினார். அதையெல்லாம் மனத்தில் போட்டுக்கொள்ளாதே’
  ‘அன்றைக்குக் கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டேன். அதை மனத்தில் போட்டுக்கொள்ளாதே’