தமிழ் மனத்துணிவு யின் அர்த்தம்

மனத்துணிவு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைச் செய்வதற்கு மனத்தில் ஒருவர் கொள்ளும் துணிவு.

    ‘என்னை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அவனுக்கு மனத்துணிவு உண்டா?’
    ‘எவ்வளவு சிரமம் வந்தாலும் நான் எனது மனத்துணிவை இழந்துவிட மாட்டேன்’
    ‘தனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்து முடிக்கும் மனத்துணிவு அவளுக்கு உண்டு’