தமிழ் மனத்தைக் கல்லாக்கிக்கொள் யின் அர்த்தம்

மனத்தைக் கல்லாக்கிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (துயரம், அதிர்ச்சி போன்றவை ஏற்படுத்தும் சூழலின் பாதிப்புக்கு உள்ளாகாதவாறு) மனத்தைத் திடப்படுத்திக்கொள்ளுதல்; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்.

    ‘எவ்வளவோ புத்திமதி சொல்லியும் கேட்காத மகனை மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார்’
    ‘மகளிடம் பேசக்கூடிய விஷயம் இல்லையென்றாலும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறத் தொடங்கினார்’