தமிழ் மன்னி யின் அர்த்தம்

மன்னி

வினைச்சொல்மன்னிக்க, மன்னித்து

 • 1

  ஒருவர் செய்த தவறு, குற்றம் ஆகியவற்றுக்காக அவர் மீது கோபம் கொள்வதில்லை அல்லது நடவடிக்கை எடுப்பதில்லை என்று முடிவுசெய்து அதை அவருக்கு உணர்த்துதல்.

  ‘நீங்கள் சொன்னபடி செய்யாதது என்னுடைய தவறுதான்; என்னை மன்னித்துவிடுங்கள்’
  ‘நீ செய்த பாவத்தை மன்னிக்க நான் யார்?’
  ‘நான் அவசரப்பட்டு அப்பாவைச் சந்தேகித்தாலும் அவர் பெருந்தன்மையுடன் என்னை மன்னித்துவிட்டார்’
  ‘முதன்முறை என்பதால் ஜேப்படியில் ஈடுபட்ட சிறுவனை நீதிபதி மன்னித்து விடுதலை செய்தார்’

தமிழ் மன்னி யின் அர்த்தம்

மன்னி

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
 • 1

  சமூக வழக்கு
  அண்ணனின் மனைவி.