தமிழ் மனப்பான்மை யின் அர்த்தம்

மனப்பான்மை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரிடம்) குறிப்பிட்ட உணர்வு, எண்ணப் போக்கு போன்றவை குறிப்பிட்ட சூழலில் மேலோங்கியிருக்கும் நிலை.

  ‘விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவனிடம் கொஞ்சம்கூடக் கிடையாது’
  ‘மக்களிடையே சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்’
  ‘கட்சித் தலைவரின் சர்வாதிகார மனப்பான்மையே தேர்தல் தோல்விக்குக் காரணம்’
  ‘தோல்வி மனப்பான்மை எதற்கும் உதவாத ஒன்று’