தமிழ் மனப்பாடம் யின் அர்த்தம்

மனப்பாடம்

பெயர்ச்சொல்

 • 1

  படித்ததை அல்லது கேட்டதை மறந்துபோகாத விதத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுதல்/படித்ததை அல்லது காதால் கேட்டதைப் பிசகாமல் திரும்பச் சொல்லக்கூடிய நிலை.

  ‘திருக்குறள் அனைத்தும் என் பெண்ணுக்கு மனப்பாடம்’
  ‘ஒரு தடவை படித்தாலே உனக்கு மனப்பாடம் ஆகிவிடுமா?’
  ‘நகரில் உள்ள அத்தனை தெருக்களும் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும்’
  ‘‘பராசக்தி’ படத்தின் வசனம் முழுவதையும் நான் மனப்பாடமாகச் சொல்வேன்’