தமிழ் மனம்வா யின் அர்த்தம்

மனம்வா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) விரும்பத் தகாத ஒன்றைச் செய்வதற்கு ஒருவருடைய மனது இடம்கொடுத்தல்.

    ‘இப்படிக் கூசாமல் பழி சொல்ல உனக்கு எப்படி மனம்வந்தது?’
    ‘பாடுபட்டு உழைத்ததை அப்படியே விட்டுக்கொடுக்க மனம்வரவில்லை’
    ‘இந்தக் குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டுப் போவதற்கு எப்படித்தான் இதன் தாய்க்கு மனம் வந்ததோ?’