தமிழ் மனம்வை யின் அர்த்தம்

மனம்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஒன்று நடக்க வேண்டும் என்பதில் அல்லது ஒன்றைச் செய்வதில்) அக்கறை அல்லது ஈடுபாடு காட்டுதல்.

    ‘நீங்கள் மனம்வைத்தால் எனக்கு ஒரு வேலை வாங்கித் தரலாம்’
    ‘நீ மனம்வைத்தால் நன்றாகப் படிக்க முடியும்’
    ‘எல்லாருக்கும் கழிப்பிட வசதிகள், சுகாதாரமான குடிநீர் ஆகியவை கிடைப்பதற்கு ஆள்பவர்கள் மனம்வைக்க வேண்டும்’