தமிழ் மனம் அடித்துக்கொள் யின் அர்த்தம்

மனம் அடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (இனம்புரியாத உணர்வினால்) மனம் நிலைகொள்ளாமல் இருத்தல்; தவித்தல்.

    ‘மணி ஆறாகியும் வீட்டுக்குத் திரும்பாத மகனை எண்ணி மனம் அடித்துக்கொண்டது’
    ‘உடல்நலமில்லாமல் இருக்கும் அம்மாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று மனம் அடித்துக்கொண்டது’
    ‘அவள் வரப்போகிறாள் என்று கேள்விப்பட்டதுமே என் மனம் அடித்துக்கொண்டது’