தமிழ் மன்றம் யின் அர்த்தம்

மன்றம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒத்த கருத்துடையவர்களுக்கான அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்கான) குழு அல்லது கூட்டமைப்பு.

  ‘ரசிகர் மன்றம்’
  ‘இலக்கிய மன்றம்’

 • 2

  (விழா, நிகழ்ச்சி போன்றவை நடத்துவதற்கு உரிய) மண்டபம்.

  ‘இந்த மன்றத்தில் கூடியிருக்கும் பார்வையாளர்கள் சற்று நேரம் அமைதி காக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்’
  ‘ராஜா அண்ணாமலை மன்றம்’