தமிழ் மயக்கு யின் அர்த்தம்

மயக்கு

வினைச்சொல்மயக்க, மயக்கி

 • 1

  ஒருவரைக் கவர்ச்சிக்கு உள்ளாக்கி வசப்படுத்துதல்.

  ‘அவள் அழகு உன்னை மயக்கிவிட்டது’
  ‘திரைப்படங்கள் மக்களை மயக்கிக் கனவுலகிற்குக் கொண்டுசெல்கின்றன’

 • 2

  தன்னையே மறக்கும்படி ஒருவரை ஆக்குதல்.

  ‘அந்தக் குழந்தையின் சிரிப்பு என்னை மயக்கிவிட்டது’
  ‘பார்ப்பவரை மயக்கும் இயற்கைக் காட்சிகள்’