தமிழ் மயங்கு யின் அர்த்தம்

மயங்கு

வினைச்சொல்மயங்க, மயங்கி

 • 1

  கவர்ச்சிக்கு உள்ளாகிக் கட்டுப்படுதல்; தன்வசம் இழத்தல்.

  ‘அவருடைய வார்த்தை ஜாலங்களில் மயங்கி மோசம்போனான்’
  ‘அவருடைய ஆடம்பரத்தைக் கண்டு மயங்கிவிடாதே!’

 • 2

  தன்னை மறத்தல்.

  ‘இயற்கைக் காட்சிகளைக் கண்டு மயங்கி நின்றான்’

 • 3

  சுயநினைவு இழத்தல்.

  ‘குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கிறார்’
  ‘கடும் வெயிலால் மயங்கி விழுந்தான்’

 • 4

  உயர் வழக்கு (பகல் பொழுது குறைந்து) இருள் பரவுதல்.

  ‘பொழுது மயங்கத் தொடங்கியது’

 • 5

  மனம் குழம்புதல்.

  ‘உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு தெரியாமல் மயங்காதே!’