தமிழ் மர யின் அர்த்தம்

மர

வினைச்சொல்மரக்க, மரத்து

 • 1

  (இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் கை, கால் முதலிய பகுதிகள்) கனத்து விறைப்பாக ஆதல்.

  ‘ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்து கால் மரத்துப்போயிருக்கிறது’

 • 2

  (உடல் அல்லது மனம்) வலியை அல்லது உணர்ச்சியை உணர இயலாமல் இருத்தல்.

  ‘பசி என்கிற உணர்ச்சியே மரத்துப்போனால் எப்படி இருக்கும்?’
  ‘தோல்விக்குமேல் தோல்வியைச் சந்தித்து மனம் மரத்துவிட்டது!’