தமிழ் மரபணு யின் அர்த்தம்

மரபணு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு உயிரியின்) பண்புகளைக் குறித்த பாரம்பரியத் தகவல்களைக் கொண்டிருக்கும் உயிரணுவின் ஒரு பகுதி.

    ‘தாவரங்களில் மரபணு மாற்றங்கள் செய்து பல புதிய தாவரங்களை உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்’
    ‘மனித மரபணுக்களின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன’
    ‘பெற்றோரை ஒத்த குணங்கள் ஒரு குழந்தையிடம் காணப்படுவதற்குக் காரணம் மரபணுக்கள்தான்’