தமிழ் மரபு யின் அர்த்தம்

மரபு

பெயர்ச்சொல்

 • 1

  (பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும்) பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி.

  ‘திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது என்பது இந்து மத மரபு’
  ‘ஜனநாயக மரபு’

 • 2

  பாரம்பரியம்.

  ‘மரபுவழி நோய்கள்’

 • 3

  ஒன்றின் அல்லது ஒருவரின் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படுவது.

  ‘சங்க இலக்கிய மரபிலிருந்து நாம் இப்போது வெகு தூரம் விலகி வந்துவிட்டோம்’
  ‘பிக்காசோ மரபையொட்டி ஏராளமான ஓவியர்கள் உருவானார்கள்’