மரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மரம்1மர்ம2

மரம்1

பெயர்ச்சொல்

 • 1

  பருமனான தண்டுப் பாகத்தையும் கிளைகளையும் உடைய, உயரமான, எல்லாப் பருவங்களிலும் வளரக்கூடிய (பொதுவாக நீண்ட நாள் நிலைக்கக்கூடிய) தாவரங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்.

  ‘எங்கு பார்த்தாலும் மரம், செடி, கொடிகள் என்று ஊரே பசுமையாக இருந்தது’
  ‘ஆல மரம்’
  ‘புளிய மரம்’
  ‘தென்னை மரம்’

 • 2

  (மேஜை, நாற்காலி முதலியவை செய்வதற்குப் பயன்படும்) வெட்டியோ அறுத்தோ நீக்கிய கிளை அல்லது அடிப்பகுதி.

  ‘மர அலமாரி’
  ‘தேக்கு மரத்தில் செய்த கட்டில்’

மரம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மரம்1மர்ம2

மர்ம2

பெயரடை

 • 1

  (நாவல், திரைப்படம் தொடர்பாக வரும்போது) எதிர்பாராத திருப்பங்களுடன் திகில் அம்சங்கள் நிறைந்த.

  ‘மர்மக் கதை’
  ‘மர்மப் படங்கள் எடுத்துப் புகழ் பெற்றவர்’