தமிழ் மரியாதை யின் அர்த்தம்

மரியாதை

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (வயது, அந்தஸ்து, பதவி முதலியவற்றின் அடிப்படையில்) (ஒருவருக்கு) காட்டும் அல்லது ஏற்பட்டிருக்கும் மதிப்பு.

  ‘வீட்டுக்கு வந்தபோது சரியான மரியாதை செய்யவில்லை என்று மாப்பிள்ளைக்குக் கோபம்’
  ‘இப்படி ஒரு காரியத்தைச் செய்து ஊரில் எனக்கிருந்த மரியாதையைக் கெடுத்துவிட்டானே’

 • 2

  (ஒருவருக்குக் காட்டும்) மதிப்பின் அடையாளம்.

  ‘பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதுபற்றித் தாத்தாவிடம் ஒரு மரியாதைக்குச் சொல்லிவிடுவோம்’