தமிழ் மரியாதை செய் யின் அர்த்தம்

மரியாதை செய்

வினைச்சொல்செய்ய, செய்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஊரில் உள்ள பெரிய மனிதருக்கு அல்லது ஊர்ப் பொதுக் காரியத்துக்கு உதவி செய்தவருக்கு) பொதுமக்கள் முன்னிலையில் சால்வை போர்த்தி, மாலை அணிவித்துக் கௌரவித்தல்.

    ‘ஊரில் பள்ளிக்கூடம் கட்ட இலவசமாக நிலம் அளித்தவருக்கு மரியாதை செய்ய வேண்டாமா?’
    ‘மாணவர்கள் அனைவரும் சேர்ந்து விழா நடத்தி ஆசிரியருக்கு மரியாதை செய்தனர்’