தமிழ் மற்றபடி யின் அர்த்தம்

மற்றபடி

இடைச்சொல்

  • 1

    ‘(குறிப்பிட்டதை அல்லது கவனிக்க வேண்டியதை) நீக்கிவிட்டுப் பார்த்தால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘முன்பு குறிப்பிட்டபடி ஏழு மணிக்கு வராமல் பத்து மணிக்கு வருவேன். மற்றபடி என் பயணத் திட்டத்தில் மாற்றம் இல்லை’
    ‘அந்தக் கடையில் விலை அதிகம். மற்றபடி பொருள்கள் தரமானவையே’