தமிழ் மற்றவர் யின் அர்த்தம்

மற்றவர்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடப்படும் நபரைத் தவிர்த்து) இன்னொருவர்; (குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத ஒருவர்; பிறர்.

    ‘அங்கு இருக்கிற இருவரில் ஒருவர் உன் சகோதரி, மற்றவர் யார்?’
    ‘உன் நண்பனாகிய நான் பாராட்டுவதைவிட மற்றவர்கள் உன் கதையைப் பாராட்ட வேண்டும்’