தமிழ் மற்றும் யின் அர்த்தம்

மற்றும்

இடைச்சொல்

 • 1

  ‘கூடுதலாக’, ‘மேலும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் ஓர் நற்செய்தி’

 • 2

  பெருகிவரும் வழக்கு குறிப்பிடப்படுவது மட்டுமல்லாமல் தொடர்புடைய பிறவற்றையும் இணைத்துக் கூறப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தச் சலுகைகள் பொருந்தும்’
  ‘நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள்’
  ‘இந்தியா, இலங்கை மற்றும் சில ஆசிய நாடுகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும்’

 • 3

  பெருகிவரும் வழக்கு (பெரும்பாலும்) ஒருவருடைய இரு பதவிகளையும் இணைத்துக் குறிப்பிடும்போது முதல் பதவியை அடுத்து இடப்படும் இடைச்சொல்.

  ‘‘பேராசிரியர் மற்றும் துணை இயக்குநர்’ என்று முகவரியில் எழுத வேண்டும்’