மறியல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மறியல்1மறியல்2

மறியல்1

பெயர்ச்சொல்

  • 1

    (அரசு, நிர்வாகம் போன்றவற்றுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க) (பணிபுரிவோரை) செல்லவிடாமல் அல்லது (வாகனங்களை) ஓடவிடாமல் தடுக்கும் செயல்.

    ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது ரயில் தண்டவாளங்களில் படுத்து மறியல்செய்து கைதானவர்கள் பலர்’
    ‘மூடிய ஆலைகளைத் திறக்கக் கோரி மறியல் போராட்டம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்களும் முடிவுசெய்தன’

மறியல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மறியல்1மறியல்2

மறியல்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிறை.