மறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறு1மறு2மறு3

மீறு1

வினைச்சொல்மீற, மீறி

 • 1

  (சட்டம், விதிமுறை, ஆணை, ஒப்பந்தம் முதலியவற்றை) பின்பற்றாமல் அல்லது மதிக்காத முறையில் நடந்துகொள்ளுதல்; புறக்கணித்தல்.

  ‘வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது தண்டனைக்கு உரிய குற்றமாகும்’
  ‘தடை உத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்கள் கைதுசெய்யப்பட்டனர்’
  ‘பெற்றோர்களின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டோம்’
  ‘அவரது வற்புறுத்தலையும் மீறி நான் ஊருக்குக் கிளம்பினேன்’
  ‘எங்களது ஒப்பந்தத்தை மீறி வேறு ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த அவர்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்’
  ‘இலக்கணத்தை மீறி எழுதப்பட்ட கவிதைகள்’
  ‘கடமையை மீறிய குற்றத்துக்காக நீங்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள்’

 • 2

  (ஒன்றுக்கு) உட்படாதபடி அல்லது கட்டுப்படாதபடி ஆதல்.

  ‘அலையின் பேரிரைச்சலையும் மீறிக்கொண்டு அவனது அலறல் கேட்டது’
  ‘அவள் என்னிடம் வெட்கத்தை மீறிக் கேட்டாள்’
  ‘என்னையும் மீறி நான் அழுதுவிட்டேன்’
  ‘காலத்தை மீறுபவன்தான் மகாகவி’
  ‘அளவுக்கு மீறிக் குடித்துவிட்டுச் சாலையோரத்தில் விழுந்துகிடக்கிறான்’
  ‘உள்ளூர் ரவுடிகள் கொடுத்த தொல்லைகளையும் மீறி இந்த இடத்தை நான் வாங்கியிருக்கிறேன்’
  ‘சக்திக்கு மீறிச் செலவு செய்கிறாய்’
  ‘தகுதிக்கு மீறி ஆசைப்படாதே’

 • 3

  (ஒன்றை அல்லது ஒருவரை) மிஞ்சுதல்.

  ‘கம்பனையே மீறிய கற்பனை இது என்று அவர் பாராட்டினார்’
  ‘மார்க்சியத்தை மீறிய தத்துவம் வேறு எதுவும் இல்லை என்று அவர் அடித்துக்கூறினார்’

 • 4

  (தடுக்கப்பட்ட அல்லது பிடிக்கப்பட்ட நிலையை) கடத்தல்; தாண்டி முன்செல்லுதல்.

  ‘வழியை மறைத்துக்கொண்டு நின்றவனை மீறி உள்ளே ஓடிவிட்டாள்’
  ‘வேலியை மீறியிருந்த கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தான்’
  ‘தடுக்க வந்த காவலர்களையும் மீறிக்கொண்டு அடியாட்கள் முன்னே ஓடினார்கள்’
  ‘முகத்திரையையும் மீறிக்கொண்டு தெரிந்த அவளது அழகிய முகம்’

மறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறு1மறு2மறு3

மறு2

வினைச்சொல்மறுக்க, மறுத்து

 • 1

  ஒன்று உண்மையானதோ சரியானதோ ஏற்கத் தகுந்ததோ அல்ல என்று தெரிவித்தல்.

  ‘அவருடைய கருத்தை நான் மறுத்தேன் என்பதற்காக என்மீது கோபப்படுவதா?’
  ‘நாட்டிலிருந்து வறுமையை அகற்ற வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது’
  ‘என்மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் வன்மையாக மறுக்கிறேன்’

 • 2

  ஒன்றைச் செய்ய முடியாது என்றோ தனக்குத் தரப்படுவதை வேண்டாம் என்றோ தெரிவித்தல்.

  ‘மேலதிகாரி விடுப்புக் கொடுக்க மறுத்துவிட்டார்’
  ‘சமுதாயத்தோடு ஒத்துப்போக மறுப்பவர்கள்’
  ‘நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்’
  ‘அந்த நிறுவனத்தின் மேலாளரைப் பார்ப்பதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது’

 • 3

  ஒருவர் ஒன்றைப் பெறவிடாமல் செய்தல்.

  ‘மலைவாழ் மக்களுக்குப் பல சலுகைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன’
  ‘எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது, அதற்காகத்தான் போராடுகிறோம்’

மறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறு1மறு2மறு3

மறு3

பெயர்ச்சொல்

மறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறு1மறு2மறு3

மறு

பெயரடை

 • 1

  மீண்டும் ஒரு முறை.

  ‘உங்கள் முடிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்’
  ‘மறு அறிவிப்பு வரும்வரை ரயில் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது’
  ‘இந்தத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன’

 • 2

  அடுத்த.

  ‘மறு பதிப்பு வெளியிட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது’
  ‘மறுநாள் காலைவரை அவனுக்குப் போதை தெளியவில்லை’
  ‘நான் சொன்ன மறு நிமிடமே அவன் புத்தகத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டான்’
  ‘மாமா ஊரில் இல்லாததால் மறு வண்டியைப் பிடித்து மதுரைக்கு வந்துவிட்டேன்’

 • 3

  ஒன்றிற்கு எதிராக அமைகிற; எதிர்.

  ‘ஆற்றின் மறு கரை’
  ‘மறு தரப்பு வாதம்’
  ‘இது நடிகரின் மறு பக்கம்’

 • 4

  ஒன்றுக்குப் பதிலாகவோ ஒன்றைப் போலவோ அமைகிற இன்னொரு; மாற்று; மற்றொரு.

  ‘பூட்டுக்கு மறு சாவி இல்லையா?’
  ‘மர்மத்தின் மறு உருவம்தான் அவன்’
  ‘நேர்மையின் மறு வடிவமாகத் திகழ்ந்தவர் எங்கள் பாட்டனார்’