தமிழ் மறுப்பு யின் அர்த்தம்

மறுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  கூறப்பட்டது தவறு என்றோ ஒன்று ஏற்கப்பட முடியாதது என்றோ தெரிவிக்கும் செயல்.

  ‘தான் கட்சி மாறிவிட்டதாக வெளிவந்த செய்திக்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்’
  ‘கல்வியைப் பற்றி இன்று வெளியான கட்டுரைக்கு நாம் உடனே மறுப்பு எழுதியாக வேண்டும்’
  ‘மாற்றியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களுக்குத் தொழிற்சங்கங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன’

 • 2

  ஒன்றைச் செய்யக் கூடாது அல்லது செய்ய மாட்டேன் என்று தெரிவிக்கும் செயல்; தடை.

  ‘படப்பிடிப்பு நடக்கும் கட்டடத்தில் நுழையப் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு’
  ‘கூப்பிட்டதும் மறுப்பேதும் சொல்லாமல் வேலைக்கு வந்துவிட்டான்’

 • 3

  ஒன்றை நிராகரித்து மேற்கொள்ளும் போக்கு.

  ‘கடவுள் மறுப்புக் கொள்கை’
  ‘சாதி மறுப்புக் கொள்கை’
  ‘வரதட்சிணை மறுப்பை நாம் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’