தமிழ் மறுபேச்சு யின் அர்த்தம்

மறுபேச்சு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சு; பதில் பேச்சு.

  ‘மறுபேச்சுப் பேசாமல் காரியத்தை முடி!’
  ‘மறுபேச்சுப் பேசிக்கொண்டிருக்க இது நேரம் இல்லை’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறை வினைகளோடு வரும்போது) (ஒருவர் கூறியதை) மறுத்துப் பேசும் பேச்சு; எதிர்ப் பேச்சு.

  ‘அப்பா ஒன்று சொல்லிவிட்டால் வீட்டில் அதற்கு மறுபேச்சே கிடையாது’