தமிழ் மறைவு யின் அர்த்தம்

மறைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பிறர் பார்வையிலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை மறைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இடம்/பிறர் பார்வையில் படாதவாறு அமைந்திருக்கும் நிலை.

  ‘மரத்தின் மறைவில் நின்றுகொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தான்’
  ‘கட்டடத்துக்குப் பின்னால் மறைவாகச் சென்று அமர்ந்தார்கள்’
  ‘புதர் மறைவில் ஒரு சிறுத்தை நின்றுகொண்டிருந்தது’

 • 2

  பிறரால் அறியவோ உணரவோ முடியாதபடி இருக்கும் நிலை அல்லது தன்மை.

  ‘அவருக்குத் தனது திட்டங்களை மறைவாக வைத்திருக்கத் தெரியவில்லை’
  ‘இரண்டாம் உலகப் போரின்போது பேரழிவு ஆயுதங்களைத் தயாரிக்க மறைவாகப் பல நாடுகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டன’

 • 3

  ஒன்று காலப்போக்கில் மறைந்தோ அழிந்தோ போகக்கூடிய நிலை.

  ‘நிலப்பிரபுத்துவத்தின் மறைவைப் பற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்’
  ‘பல பறவையினங்களின் மறைவுக்கு மனிதனின் செயல்பாடுகள்தான் காரணம்’

 • 4

  உயர் வழக்கு இறப்பு.

  ‘தலைவரின் மறைவுகுறித்து அவர் அனுதாபம் தெரிவித்தார்’