தமிழ் மலர் யின் அர்த்தம்

மலர்

வினைச்சொல்மலர, மலர்ந்து

 • 1

  மொட்டு விரிதல்; (பூ) பூத்தல்.

  ‘இரவில் மலரும் பூச்செடி இது’
  உரு வழக்கு ‘புது ஆட்சி மலர மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேட்பாளர் கோரினார்’

 • 2

  (முகத்தில்) பொலிவு ஏற்படுதல்.

  ‘அம்மாவைக் கண்டதும் குழந்தையின் முகம் மலர்ந்தது’

 • 3

  (விரும்பத் தக்க நிலை, தன்மை போன்றவை) தோன்றுதல்; ஏற்படுதல்.

  ‘கல்லூரியில் மூன்றாம் ஆண்டின்போது அவர்கள் இடையே காதல் மலர்ந்தது’
  ‘புன்னகை மலர உள்ளிருந்து வந்தான்’

 • 4

  உயர் வழக்கு (வாழ்வு) வளம் அடைதல்.

  ‘ஏழைகளின் வாழ்வு மலரப் பாடுபட்ட தலைவரின் கதை’

தமிழ் மலர் யின் அர்த்தம்

மலர்

பெயர்ச்சொல்

 • 1

  பூ.

  ‘ஒரு மலரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்’
  ‘மலர்க் கண்காட்சி’

தமிழ் மலர் யின் அர்த்தம்

மலர்

பெயர்ச்சொல்

 • 1

  விழா, பண்டிகை போன்றவற்றுக்கான ஒரு பத்திரிகையின் அல்லது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு.

  ‘பொங்கல் மலர்’
  ‘கல்லூரியின் ஆண்டு மலரில் என் கவிதை வந்திருக்கிறது’