தமிழ் மலர்ச்சி யின் அர்த்தம்

மலர்ச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (முகம், கண்கள் ஆகியவற்றில்) மகிழ்ச்சி, உற்சாகம் முதலிய உள்ளுணர்ச்சியைக் காட்டக்கூடிய பொலிவு.

  ‘அவர் முக மலர்ச்சியோடு என்னை வரவேற்றார்’

 • 2

  மேம்பாடு; முன்னேற்றம்; வளர்ச்சி.

  ‘ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சி காண வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது’
  ‘தமிழ்ப் பண்பாட்டு மலர்ச்சியின் முழுவடிவமாக அமைந்திருப்பது பொங்கல் பண்டிகை’
  ‘இந்தக் கல்வி முறையினால் இந்தியர்களுடைய சிந்தனையில் ஒரு புதிய மலர்ச்சி ஏற்பட்டது’
  ‘தமிழுக்கு ஒரு புது மலர்ச்சியை உண்டாக்கியவர் உ. வே. சாமிநாதையர்’

 • 3

  (குறிப்பிட்ட நிலை அல்லது தன்மையின்) முழுமையான அல்லது சிறப்பான வெளிப்பாடு.

  ‘பருவ மலர்ச்சி என்பது ஆணைவிடப் பெண்ணுக்கே முதலில் நிகழும்’
  ‘இப்படி ஒவ்வொரு முறையும் அன்பின் மலர்ச்சியை நீங்கள் உண்மையாகவே காண்பீர்கள்’
  ‘கருத்து மலர்ச்சி!’