தமிழ் மல்லா யின் அர்த்தம்

மல்லா

வினைச்சொல்மல்லாக்க, மல்லாந்து, மல்லாந்த ஆகிய வடிவங்களில் மட்டும்

  • 1

    முதுகு கீழாகவும் முகம் மேல்நோக்கியும் இருத்தல்.

    ‘குப்புறப் படுத்திருந்த குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்தாள்’
    ‘ரப்பர் மிதவையின் மேல் மல்லாந்து படுத்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்’
    ‘அவன் மல்லாந்த நிலையில் விழுந்து கிடந்தான்’