தமிழ் மல்லுக்கட்டு யின் அர்த்தம்

மல்லுக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  அருகிவரும் வழக்கு மற்போர் செய்தல்.

  ‘நம் ஊர் வஸ்தாதும் வெளியூர் பயில்வானும் இன்று மல்லுக்கட்டுகிறார்களாம்’

 • 2

  (பேச்சில்) தகராறு செய்தல்/(தேவையில்லாமல் ஒருவருடன்) வாக்குவாதத்தில் ஈடுபடுதல்.

  ‘கேட்கிற வாடகையைக் கொடுத்துவிட்டு வராமல் வண்டிக்காரருடன் ஏன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறாய்?’

 • 3

  (ஒன்றைச் செய்ய அல்லது ஒருவரைச் செய்யவைக்க) போராடுதல்.

  ‘தினமும் மல்லுக்கட்டிதான் குழந்தையைச் சாப்பிட வைக்க வேண்டியதாக இருக்கிறது’
  ‘இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று மகனோடு மல்லுக்கட்டிப்பார்த்துவிட்டேன். அவன் கேட்கிற வழியாக இல்லை’
  ‘ஒரு மணி நேரமாக மல்லுக்கட்டியும் இயந்திரத்தை இயக்க முடியவில்லை’