தமிழ் மலி யின் அர்த்தம்

மலி

வினைச்சொல்மலிய, மலிந்து

 • 1

  (பொருள்) அதிக அளவில் கிடைத்தல்.

  ‘இந்தக் கோடையில் மாம்பழம் மலிந்து கிடந்தது’

 • 2

  (ஊழல், குற்றம், பிழை போன்றவை அளவில்) மிகுதல்; அதிகமாதல்.

  ‘வெறுப்பும் இனவெறியும் மலிந்துள்ள சமுதாயத்தைத் திருத்த முடியுமா?’
  ‘பிழைகள் மலிந்த சிலப்பதிகாரப் பதிப்பு’
  ‘ஊழல்கள் மலிந்துள்ள நாடுகளின் வரிசையை ஒரு இணையதளம் வெளியிட்டது’

 • 3

  (விலை) குறைதல்.

  ‘தக்காளி விலை மலிந்துவிட்டதால் சிறுவியாபாரிகள் கூடைகூடையாக வாங்கிச் சென்றனர்’