தமிழ் மலைக்குப் போ யின் அர்த்தம்

மலைக்குப் போ

வினைச்சொல்போக, போய்

  • 1

    (குறிப்பிட்ட வாரங்கள் விரதம் கடைப்பிடித்து) சபரி மலையிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல்.

    ‘நான் மலைக்குப் போகப்போகிறேன். அதனால் அசைவம் எதுவும் சாப்பிட மாட்டேன்’