தமிழ் மலையேறு யின் அர்த்தம்

மலையேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

  • 1

    (ஒருவரைப் பிடித்திருக்கும் தெய்வ ஆவேசம் அவரை) விட்டு நீங்குதல்.

    ‘கற்பூரம் ஏற்றிக் காட்டிய பிறகு சாமி மலையேறியது’

  • 2

    (பெரும்பாலும் இறந்தகால முற்று வடிவங்கள் மட்டும்) (பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவை) நடைமுறையில் இல்லாமல்போதல்.

    ‘எது சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது’