தமிழ் மழுங்கல் யின் அர்த்தம்

மழுங்கல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒன்றின் முனை, பரப்பு போன்றவை) கூர்மையாக இல்லாத தன்மை.

    ‘மழுங்கல் கத்தி’
    ‘மழுங்கலான பாறை’

  • 2

    (அறிவு, மூளை போன்றவற்றைக் குறித்து வரும்போது) நுட்பமாக அல்லது தெளிவாக ஆய்ந்தறிய இயலாத தன்மை; கூர்மையின்மை.

    ‘அவனுக்கு புத்தி மழுங்கலாகிவிட்டது. இல்லையென்றால் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடியிருப்பானா?’