தமிழ் மழுங்கு யின் அர்த்தம்

மழுங்கு

வினைச்சொல்மழுங்க, மழுங்கி

 • 1

  (கத்தி போன்றவற்றில்) கூரிய முனை தேய்தல்; கூர்மை இழத்தல்.

  ‘முனை மழுங்கிப்போன கத்தி’

 • 2

  ஒன்று அதன் இயல்பான, நல்ல நிலையிலிருந்து மோசமான நிலையை அடைதல்.

  ‘உன் மூளை மழுங்கிவிட்டதா, என்ன?’
  ‘அவனுக்கு அறிவு மழுங்கிப்போய்விட்டது’
  ‘கோபம் சிந்தனையை மழுங்கடித்துவிடுகிறது’
  ‘உங்கள் கட்சி கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை மழுங்கிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?’
  ‘எனது செல்வாக்கை மழுங்கச் செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன’
  ‘‘மக்களின் ரசனையைத் தொலைக்காட்சி மழுங்கடித்துவிட்டதா?’ என்பது பற்றிய பட்டிமன்றத்தைக் கல்லூரி மாணவர்கள் நடத்தினார்கள்’